கண்ணோட்டம்
Organizational Chart

தூரநோக்கு
""நவீன தொழில்நுட்பங்களால் வலுப்பெற்ற அறிவுத்திறன்மிக்க சுபீட்சமான தேசம்""
பணிக்கூற்று
சமூக மற்றும் கைத்தொழில் மாற்றத்தினூடாக தொழில்நுட்ப முன்னேற்றம், புத்தாக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய தேசிய குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு தொழில்நுட்ப அடிப்படைக் கொள்கைகள், உபாயங்கள், முன்னுரிமைகள், நிகழ்ச்சித்திட்டங்கள், செயற்திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குதல் மற்றும் புத்துயிரூட்டல்.
கடமைகளும் பணிகளும்
டிஜிட்டல் பொருளாதார விடயங்களுடனும், அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்ட தேசிய கொள்கைகளின் அடிப்படையில் திணைக்களங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற விடயங்களுடனும் தொடர்புபட்ட கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் வகுத்தமைத்தல், செயற்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்.
ஊழலும், வீண்விரயமும் இல்லாதொழிக்கப்படுகின்ற அதேவேளை, அமைச்சின் பணிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தி, நவீன முகாமைத்துவ நுணுக்கங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி அனைத்து முறைமைகளையும் நடைமுறைகளையும் மறுசீரமைத்தல்.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைவருக்கும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
சேவைகளை வழங்குவதில் உற்பத்தித்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்துவதற்காக அரசாங்க நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை எளிதாக்குதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
சமூகத்தின் எல்லா பிரிவினரிலும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பயன்பாட்டினை ஊக்குவித்து அதிகரிப்பதற்கு உபாயங்களை விருத்திசெய்தல் அத்துடன் தனியார் துறையுடன் கூட்டாண்மையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்து வசதியளித்தல்.
கணினிவழி பாதுகாப்பு தொடர்பிலான முனைப்பான தலையீடு மற்றும் சம்பவங்களைத் தடுத்தல்.
டிஜிட்டல் தடயவியல் புலணாய்வுக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பினை வழங்குதல்.
நிர்வாகம் தொடர்பான தராதரங்கள் மற்றும் விடயங்களை அமுல்படுத்துதல்.
ஒழுங்குபடுத்துகைச் செயன்முறையை வடிவமைத்தல், பொது நலனைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரித்து வரும் போட்டி சந்தையில் சவால்களுக்கு ஏற்ப செயற்படுதல் ஆகியவற்றின் மூலம் தொலைத்தொடர்பு துறையில் நிலைபேரான அபிவிருத்தியை ஊக்குவித்தல்.
டிஜிட்டல் தொழில்நுட்ப தொழில்முயற்சிகளின் விரிவாக்கம் தொடர்பான விடயங்கள்.
பசுமை தொழில்நுட்ப கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு தொடர்புடைய அமைச்சுக்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.
தொழில்நுட்ப அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களின் நோக்கெல்லைக்குள் வரும் ஏனைய அனைத்து விடயங்களும்.
தொழில்நுட்ப அமைச்சரின் கீழ் வருகின்ற அனைத்து நிறுவனங்களின் மேற்பார்வை
செயற்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்கள்
- 2008 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தகவல் அத்துடன் தொடர்புத் தொழினுட்பவியல் (திருச்சத்) சட்டம்
- 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்( English )
- 1994 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கைக் கட்டளைகள் நிறுவனச் சட்டம் ( English )
- 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டம்
- 1996 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டம் ( English )
- 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ( English )